தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ வாலிபர் தற்கொலை

 வாலிபர் தற்கொலை

 வாலிபர் தற்கொலை


ADDED : மார் 18, 2026 03:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 18, 2026 03:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: வெளிநாட்டிற்கு செல்ல முடியாத மன உளைச்சலில் வாலிபர் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கடலுார் முதுநகர், குழந்தை காலனியைச் சேர்ந்தவர் அபிமன்னன் மகன் அரிகிருஷ்ணன், 29; கேட்டரிங் படித்த இவர், சிங்கப்பூரில் வேலை செய்துவிட்டு சொந்த கிராமத்திற்கு திரும்பினார்.

அவரால் மீண்டும் வெளிநாட்டிற்கு செல்ல முடியவில்லை. இதனால் கடும் மனஉளைச்சலில் இருந்தார். நேற்று முன்தினம் மாலை 4:00 மணிக்கு தனது அறைக்குள் சென்று தாழிட்டுக் கொண்டவர் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை.

சந்தேகமடைந்த குடும்பத்தினர், கதவை உடைத்து பார்த்தபோது அரிகிருஷ்ணன் புடவையால் துாக்கில் தொங்கி கொண்டிருந்தார். அவரை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us