ADDED : ஏப் 03, 2026 05:15 AM
அ நிறம் | அளவு
மந்தாரக்குப்பம்: வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஊமங்கலம் அடுத்த நறுமணம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சிவ சண்முகம், 21; இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் கடும் மனஉளைச்சலில் இருந்தார். இவரது குடும்பத்தினர் நேற்று அதிகாலை எழுந்து பார்க்கும் போது இவர்களுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள மாமரத்தின் கிளையில் சிவச ண்முகம் புடவையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து ஊமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
