ADDED : ஜூலை 04, 2026 08:30 PM
பரங்கிப்பேட்டை:குடும்ப பிரச்னையால், வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை மெயின்ரோடு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ்காந்தி, 40; இவர், துபாய் நாட்டில் மீன்பிடி தொழில் வந்தார்.
அங்கு, சரியான முறையில் வேலை கிடைக்காதால், வீட்டிற்கு வந்துவிடுகிறேன் என மனைவி நவீனாவிடம், ராஜீவ்காந்தி கூறியுள்ளார்.அதற்கு, நவீனா, 'கடன் பிரச்சனை உள்ளது. கொஞ்சம் நாள் அங்கிருந்து சம்பாதித்து விட்டு ஊருக்கு திரும்பி வரலாம்,' என கூறியுள்ளார்.
ஆனால், ராஜீவ்காந்தி கடந்த வாரம் சி.புதுப்பேட்டைக்கு வந்துவிட்டார். இதனால், நவீனா கோபித்துக்கொண்டு தனது தாய் வீடான சீர்காழி பழையாருக்கு சென்றுவிட்டார். இதனால், மனமுடைந்த ராஜீவ்காந்தி நேற்று முன்தினம் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து, நவீனா கொடுத்த புகாரின்பேரில், பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகிறார்.
