ADDED : ஆக 23, 2026 10:14 PM
அ நிறம் | அளவு
கடலுார்: மது அருந்த பணம் இல்லாத விரக்தியில் வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூரைச் சேர்ந்தவர் வினோத்குமார்,38; திருமணமாகவில்லை. மது பழக்கத்திற்கு அடிமையான இவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தார். நேற்று அவர் மது அருந்த, தனது தந்தை ராமலிங்கத்திடம் பணம் கேட்டார். அவர் பணம் தர மறுக்கவே விரக்தியடைந்த வினோத்குமார் தனது வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின் பேரில், கடலுார், திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
