ADDED : ஆக 23, 2026 10:14 PM
அ நிறம் | அளவு
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே தற்கொலைக்கு முயன்ற வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஸ்ரீமுஷ்ணம் அடுத்த க.தொழூரை சேர்ந்தவர் முனியப்பன் மகன் சக்திவேல், 23; பம்பை அடிக்கும் தொழிலாளி. திருமணமான நிலையில் கடந்த, 2 ஆண்டுகளுக்கு முன் மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் விரக்தியடைந்த அவர், மதுஅருந்தி வந்துள்ளார்.
கடந்த, 19ம் தேதி வீட்டின் பின்புறம் மாட்டு தொழுவத்தில் துாக்குபோட்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை மீட்டு, சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சக்திவேல் நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
