ADDED : ஆக 30, 2026 10:03 PM
அ நிறம் | அளவு
கடலுார்: வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கடலுார், புதுக்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் மகன் ஆகாஷ் தர்ஷன்,22; இவர், நேற்று முன்தினம் தனது தாய் கோமதீஸ்வரியிடம் பேசி விட்டு உறங்க சென்றார். சிறிது நேரம் கழித்து கோமதிஸ்வரி, ஆகாஷ் தர்ஷன் அறைக்கு சென்று சென்று பார்த்து போது, அவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது.
புகாரின் பேரில், கடலுார் புதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து. வாலிபர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரிக்கின்றனர்.
