UPDATED : அக் 12, 2026 03:38 PM
ADDED : அக் 12, 2026 03:36 PM
அ நிறம் | அளவு
பண்ருட்டி: வயிற்று வலி காரணமாக வாலிபர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி அடுத்த ஏ.கே.பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் எழுமலை மகன் கிருஷ்ணராஜ்,26; சமையல் மாஸ்டர்; திருமணமாகாதவர். வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர், கடந்த 9 ம் தேதி பிற்பகல் குடிபோதையில் பூச்சி மருந்தை குடித்தார். அதனை அறிந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல்சிகிச்சைக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர், அங்கு அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
