தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை

வாலிபர் தற்கொலை


ADDED : நவ 19, 2026 09:17 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 09:17 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேப்பூர்: காதலியை திருமணம் செய்ய முடியாததால் விரக்தியில் பூச்சி மருந்து குடித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வேப்பூர் அடுத்த காளியமேட்டை சேர்ந்தவர் ரத்தினசாமி மகன் அருண்மணி,21. இவர் ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், அவரின் பெற்றோர்களிடம் திருமணம் செய்து வைக்க கேட்டார். அதற்கு பெற்றோர்கள் காலம் தாழ்த்தியதால் விரக்தியடைந்த அவர், நேற்று (நவ.,18) காலை தங்களின் விவசாய வயலில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயக்கமடைந்தார்.

உடன், அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு வேப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி அளித்த பின் மேல் சிகிச்சைக்காக, திருச்சி, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இன்று (நவ.,19) சிகிச்சை பலனின்றி இறந்தார்.

வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us