/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போக்சோ வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது
/
போக்சோ வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது
ADDED : அக் 25, 2024 06:37 AM

கிள்ளை: போக்சோ வழக்கில் கோர்ட்டில் ஆஜராகமல் இரண்டரை ஆண்டாக தலைமறைவாக இருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிள்ளை, நஞ்சைமகத்து வாழ்க்கை கிராமத்தை சேர்ந்தவர் ராஜன் மகன் சூர்யா, 29. இவர், மீது கிள்ளை போலீசில் கடந்த 2020ம் ஆண்டு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் மேல் விசாரணை கடலுார் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் சூர்யா, கோர்ட்டில் ஆஜராகாமல் இரண்டரை ஆண்டாக தலைமறைவாக இருந்து வந்தால், பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதைதொடர்ந்து, கிள்ளை போலீசார் சூர்யாவை தேடி வந்தனர்.
இந்நிலையில் கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் கோயம்புத்துாரில் பதுங்கியிருந்த சூர்யாவை நேற்று கைது செய்து கடலுார் போக்சோ கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சூர்யாவை, ௧௫ நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.