/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபருக்கு மாவுக்கட்டு
/
பீர் பாட்டிலால் தாக்கிய வாலிபருக்கு மாவுக்கட்டு
ADDED : மார் 25, 2025 06:56 AM

மந்தாரக்குப்பம் : மந்தாரக்குப்பத்தில் நடந்து சென்றவரை பீர் பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்தனர்.
மந்தாரக்குப்பம் கடை வீதியை சேர்ந்தவர் பாஸ்கர். 35; நேற்று முன்தினம் இரவு கடை வீதியில் நடந்து சென்றார். அப்போது வழியில் நின்றிருந்த சிவக்குமார் மற்றும் வசந்த் ஆகியோர் பாஸ்கர் மீது சிகரெட்டை வீசியுள்ளனர். இதை தட்டிக்கேட்டதால் ஆத்திரமடைந்த சிவக்குமார், பீர் பாட்டிலால் பாஸ்கர் தலையில் தாக்கினார்.
காயமடைந்த பாஸ்கர் ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இதுகுறித்து புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து ஒம்சக்தி நகரை சேர்ந்த சிவக்குமார், 25; வசந்த், 24; ஆகிய இருவரை கைது செய்தனர். அதில் தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்ததில் சிவக்குமார் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு, மருத்துவமனையில் மாவுக்கட்டு போடப்பட்டது.