/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கோழி திருடிய வாலிபர் போலீசில் ஒப்படைப்பு
/
கோழி திருடிய வாலிபர் போலீசில் ஒப்படைப்பு
ADDED : ஏப் 23, 2025 10:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்:
கடலுார் அருகே மொபட்டில் கோழி திருட வந்த வாலிபரை, பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
கடலுார் அடுத்த திருவந்திபுரத்தைச் சேர்ந்தவர் கோபிநாத்,26. இவர் வீட்டில் கோழிகளை வளர்த்து வருகிறார். நேற்றுமுன்தினம் அதிகாலை 2:00 மணிக்கு மொபட்டில் வந்த வாலிபர் ஒருவர், கோழிகளை திருட முயன்றார். சத்தம் கேட்டு வந்த கோபிநாத்,அக்கம்பக்கத்தினர் உதவியுடன் வாலிபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
விசாரணையில் கடலுார் செல்லங்குப்பத்தைச் சேர்ந்த பிரவின்,21,என்பதும், கோழிகளை திருட வந்ததும் தெரிந்தது. புகாரின் பேரில்திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

