/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி படையெடுத்த இளைஞர்கள்
/
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி படையெடுத்த இளைஞர்கள்
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி படையெடுத்த இளைஞர்கள்
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு புதுச்சேரி படையெடுத்த இளைஞர்கள்
ADDED : ஜன 02, 2025 06:54 AM
கடலுார்,; கடலுார் இளைஞர்கள், ஆங்கில புத்தாண்டை கொண்டாடுவதற்காக புதுச்சேரிக்கு படையெடுத்ததால், கடலுார்
புதுச்சேரி சாலையில் அதிகாலை வரை போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. ஆங்கில புத்தாண்டை கொண்டாடும் பழக்கம், தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
பெரியவர்கள் கோவிலுக்கு செல்லுதல், புத்தாடைகள், பொருட்கள் வாங்கி மகிழ்வதிலும், இளைஞர்கள் கேக் வெட்டி கொண்டாடுவது, பட்டாசு வெடித்து மகிழ்வது போன்றவைகளில் ஆர்வம் காட்டுவர்.
இளைஞர்களிடையே தற்போது பார்ட்டி கல்ச்சர் பரவி வருவதால், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நட்சத்திர விடுதிகளில் கொண்டாடுவதை விரும்புகின்றனர்.
கடலுார் நகரில் பார்ட்டி கல்ச்சர் வசதி இல்லாததால் அருகிலுள்ள புதுச்சேரிக்கு படையெடுத்தனர். புதுச்சேரியில் நட்சத்திர விடுதிகள், பீச் ஹவுஸ் பார்ட்டிகள் போன்றவற்றால் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்டியது.
இதனால் கடலுார் புதுச்சேரி சாலையில் விடிய, விடிய வாகனங்கள் நடமாட்டம் அதிகளவில் இருந்தது.
இளைஞர்களுடன் டீன்ஏஜ் பெண்களும், பார்ட்டிக்கு சென்று வந்து கொண்டிருந்தனர். இதனால் புதுச்சேரி மற்றும் கடலுார் மாவட்ட போலீசார் கடலுார் புதுச்சேரி சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

