தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மண்டல அளவிலான அபாகஸ் போட்டி

மண்டல அளவிலான அபாகஸ் போட்டி

மண்டல அளவிலான அபாகஸ் போட்டி


ADDED : ஜன 12, 2026 03:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2026 03:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிதம்பரம்: எஸ்.ஐ.பி., அபாகஸ் அகாடமி சார்பில், மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி பரிசுகளை வழங்கினார்.

சென்னை தலைமையிடமாக கொண்ட, எஸ்.ஐ.பி., அபாகஸ் அகடாமி, இந்தியா முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயிற்சி மையங்களில், மாணவர்களுக்கு கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில் ஆண்டுதோறும் போட்டி நடத்தி வருகிறது.

இந்தாண்டு, மண்டல அளவிலான அபாகஸ் போட்டி, நேற்று புதுச்சேரி அடுத்துள்ள பட்டானுார் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது.

போட்டியில் புதுச்சேரி, காரைக்கால், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் இருந்து 1,500 மாணவர்கள் பங்கேற்றனர். இரண்டு சுற்றுகளாக நடந்த போட்டியில் மொத்தம் 700 மாணவர்கள் வெற்றி பெற்றனர். விழாவில் சிறப்பு விருந்தினராக, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில், எஸ்.ஐ.பி.,அபாகஸ் அகடாமியின் தலைமை அதிகாரி சஞ்ஜிவ் மேனன், மாநில தலைவர் ரவிசங்கர், முகேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். போட்டி ஏற்பாடுகளை வினோத், சற்குணன் குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us