தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பென்னாகரம் அரசு பள்ளி மாணவர்கள் மாநில கால்பந்து போட்டிக்கு தேர்வு

பென்னாகரம் அரசு பள்ளி மாணவர்கள் மாநில கால்பந்து போட்டிக்கு தேர்வு

பென்னாகரம் அரசு பள்ளி மாணவர்கள் மாநில கால்பந்து போட்டிக்கு தேர்வு


ADDED : பிப் 07, 2025 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 07, 2025 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பென்னாகரம் : பென்னாகரம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தேர்வாகி உள்ளனர்.

தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், அண்மையில் நடந்த மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் அரசு, தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், 14 வயதிற்கு உட்பட்ட பிரிவில் பென்னாகரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற பென்னாகரம் அரசு ஆண்கள் பள்ளி மாணவர்கள், இந்த மாதத்தில் தேனியில் நடக்கவுள்ள மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். மாநில அளவிலான கால்பந்து போட்டிக்கு முதன் முதலாக பென்னாகரம் பகுதியில் இருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் தேர்வு பெற்றுள்ளதால், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us