தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ தயார் நிலையில் நிவாரண முகாம்கள் கூட்டத்தில் அரூர் ஆர்.டி.ஓ., தகவல்

தயார் நிலையில் நிவாரண முகாம்கள் கூட்டத்தில் அரூர் ஆர்.டி.ஓ., தகவல்

தயார் நிலையில் நிவாரண முகாம்கள் கூட்டத்தில் அரூர் ஆர்.டி.ஓ., தகவல்


ADDED : அக் 04, 2024 01:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 01:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தயார் நிலையில் நிவாரண முகாம்கள்

கூட்டத்தில் அரூர் ஆர்.டி.ஓ., தகவல்

அரூர், அக். 4-

அரூர் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் தயார் நிலை பணிகள் குறித்த ஆலோசனை -கூட்டம் நேற்று நடந்தது.

ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேகர் தலைமை வகித்து பேசியதாவது: வடகிழக்கு பருவ மழை தொடர்பான பேரிடர் நிவாரண பணிகள் இருப்பின், அதை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கும் பொருட்டு, 1077க்கு தகவல் அளிக்க வேண்டும். தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளின் போது தேவைப்படும் உபகரணங்களையும், பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் வெள்ளம் வரும் இடங்களில் பயன்படுத்த தேவையான மணல் மூட்டைகளை, தயார் நிலையில் இருப்பு வைத்திருக்க வேண்டும்.

அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில், முறையே, 9 மற்றும், 11 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிவாரண முகாம்கள் பள்ளிகள் மற்றும் சமுதாய கூடங்களில் செயல்படும். இதில், உரிய மின்சாரம், குடிநீர் மற்றும் கழிவறை வசதி ஆகியவை உள்ளதா என்பதை தாசில்தார்கள் மற்றும் பி.டி.ஓ.,க்கள் தணிக்கை செய்து தயார் நிலையில் வைக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

கூட்டத்தில் வருவாய், தீயணைப்பு, ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலை உள்ளிட்ட அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us