/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பொ.மல்லாபுரம் மின் மயான தகன மேடை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்

ADDED : ஏப் 02, 2025 01:25 AM
பொ.மல்லாபுரம் மின் மயான தகன மேடை பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தல்
பாப்பிரெட்டிப்பட்டி:--தர்மபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேரூராட்சியில், பொ.மல்லாபுரம் பாரஸ்ட் மயானம் உள்ளது. அங்கு இடவசதியின்மையால், உடல்கள் அடக்கம் செய்த இடத்திலேயே, மற்ற உடல்களை அடக்கம் செய்யும் சூழல் உள்ளது.
இதனால், மயானத்தில் சிலர் இறந்த உடல்களை எரித்து வந்தனர். இவ்வாறு எரியூட்டப்படும் போது குடியிருப்பு பகுதியில் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பாதிக்கின்றனர். இதை கருத்தில் கொண்டு சிலர், மின் மயானம் தேடி தர்மபுரி, அரூர் நகரங்களுக்கு செல்கின்றனர்.
இதை தவிர்க்க பொ.மல்லாபுரம் மயானத்தில், 1.55 கோடி ரூபாய் செலவில், மின் மயானம் கட்டப்பட்டது. இப்பணி முடிவடைந்து சில மாதங்களாகியும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் இறந்த உடல்களை எரியூட்ட அரூர் பகுதிக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே, மின் மயான தகன மேடையை பயன்பாட்டிற்கு கொண்டு வர, பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.