தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ விநாயகர் சிவசுப்பிரமணியர் சுவாமி கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா கொடியேற்றம்

விநாயகர் சிவசுப்பிரமணியர் சுவாமி கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா கொடியேற்றம்

விநாயகர் சிவசுப்பிரமணியர் சுவாமி கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா கொடியேற்றம்


ADDED : ஏப் 06, 2025 01:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 06, 2025 01:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விநாயகர் சிவசுப்பிரமணியர் சுவாமி கோவில் பங்குனி உத்திர தேர் திருவிழா கொடியேற்றம்

தர்மபுரி:தர்மபுரி அடுத்த, அன்னசாகரம் விநாயகர் சிவசுப்பிரமணியர் சுவாமி கோவிலில், பங்குனி உத்திர தேர் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. யாகசாலையில் இருந்து புனித நீர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, கொடிமரத்துக்கு ஊற்றி சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து, இரவு ஆட்டுக்கிடா வாகனத்தில் சுவாமி உற்சவம் நடந்தது.

இன்று நரி வாகன உற்சவமும், நாளை பூத வாகன உற்சவம், நாளை மறுநாள் நாக வாகன உற்சவம் நடக்கவுள்ளது. வரும், 9- அன்று காலை பால்குட ஊர்வலமும், இரவு சுவாமி திருக்கல்யாணம், தோரணவாயில் ஊஞ்சல் சேவை மற்றும் மயில் வாகனத்தில், சுவாமி உற்சவமும் நடக்கிறது. வரும், 10- அன்று விநாயகர் தேரோட்டம், யானை வாகன உற்சவமும் நடக்கிறது.

விழாவில் முக்கிய நாளான வருகின்ற, 11- அன்று பங்குனி உத்திர தேரோட்டம் நடக்கிறது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமி மகா

ரதத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தொடர்ந்து, பெண்கள் மட்டும் நிலை பெயர்க்கும் தேரோட்டமும், மாலை பொதுமக்கள் வடம் பிடிக்கும் தேரோட்டமும் நடக்கவுள்ளது. வரும், 12- அன்று வேடர்பறி உற்சவம், 13-ல் கொடி இறக்கம், மஞ்சள் நீராட்டு விழா மற்றும் பல்லக்கு உற்சவம், 14-ல் சயன உற்சவமும், 15-ல் விடையாற்றி உற்சவமும் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, ஹிந்து சமய அற

நிலையத்துறையினர் மற்றும் விழா

குழுவினர் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us