தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வரட்டாறு தடுப்பணையை துார்வார அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

வரட்டாறு தடுப்பணையை துார்வார அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்

வரட்டாறு தடுப்பணையை துார்வார அரசுக்கு விவசாயிகள் வலியுறுத்தல்


ADDED : ஏப் 01, 2024 03:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2024 03:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சித்தேரி மலைப்பகுதியில் இருந்து, தடுப்பணைக்கு நீர்வரத்து வருகிறது. தடுப்பணையின் மொத்த கொள்ளளவு 34.5 அடியாகும். இந்நிலையில், தடுப்பணையை துார்வாரி, கூடுதல் நீரை தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

இது குறித்து அவர்கள் கூறியதாவது:

தடுப்பணையின் இடதுபுற பகுதியில், 100 ஏக்கர் பரப்பில் மேடாக உள்ளது. அப்பகுதியில் சீமைக் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்து புதர்மண்டியுள்ளது. எனவே, அப்பகுதியில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றுவதுடன், மேடான பகுதியை துார்வாரி, 10 அடிக்கு ஆழப்படுத்த வேண்டும். இதன் மூலம், கூடுதலாக நீரை தேக்கலாம். இதற்கு அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனில், விவசாயிகளுக்கு தடுப்பணையில் இருந்து, மண் அள்ள அனுமதி வழங்க வேண்டும். இதன் மூலம், தடுப்பணை ஆழமாகும். தடுப்பணையில் இருந்து, இது வரை ஏரிகள் மற்றும் பாசனத்திற்கு முறையாக தண்ணீர் விடுவதில்லை. எனவே, இதை முறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us