தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ காலபைரவர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு

காலபைரவர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு

காலபைரவர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு


ADDED : ஜன 25, 2025 01:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2025 01:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காலபைரவர் கோவில் அறங்காவலர் குழு தலைவர் பொறுப்பேற்பு

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டையில் காலபைரவர் கோவில் உள்ளது. இதில், புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்கள் தேர்வு நேற்று நடந்து. இதில், காளியப்பன், பெருமாள், மணி, விஜியா, உண்ணாமலை ஆகியோர் உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கபட்டனர். அதை தொடர்ந்து, அறங்காவலர் குழு தலைவருக்கான தேர்தல், ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மகாவிஷ்ணு தலைமையில் நடந்தது. தேர்தல் ஆய்வாளர் தேவகிரி தேர்தலை நடத்தினார்.

தலைவராக காளியப்பன் தேர்ந்தெடுக்க பட்டார். தேர்ந்தெடுக்கபட்ட அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம், மாவட்ட துணைத்தலைவர் ஆறுமுகம், சுற்றுசூழல் அணி மாவட்ட அமைப்பாளர் இளைய சங்கர், ஐ.டி., விங் கவுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us