/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தர்மபுரியில் காத்திருப்பு போராட்டம்
/
கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தர்மபுரியில் காத்திருப்பு போராட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தர்மபுரியில் காத்திருப்பு போராட்டம்
கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தர்மபுரியில் காத்திருப்பு போராட்டம்
ADDED : ஜன 30, 2025 01:30 AM
கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தர்மபுரியில் காத்திருப்பு போராட்டம்
தர்மபுரி, :தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில், தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த காத்திருப்பு போராட்டத்துக்கு, வட்டத் தலைவர் நக்கீரன் தலைமை வகித்தார்.
நுாறாண்டுகளாக விவசாயம் செய்து வரும் விவசாயிகளின் அனுபவ நிலங்களுக்கு பட்டா வழங்க வேண்டும். வருவாய்த் துறையிடமிருந்து, சாகுபடி நிலங்களை வனத்துறைக்கு மாற்றியதாக கூறப்படும் உத்தரவை திரும்பபெற வேண்டும். மா மரங்களுக்கு வரி செலுத்த வேண்டுமென, விவசாயிகளை நிர்பந்திக்கும் வனத்துறையின் நடவடிக்கையை கைவிட வேண்டும். வன உரிமைச் சட்டம், 2006 ஐ அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநிலத் தலைவர் டில்லிபாபு, சி.ஐ.டி.யு., மாநில செயலாளர் நாகராசன், மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் மாவட்ட தலைவர் குமார் உள்பட பலர்
பங்கேற்றனர்.