/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
'இழந்த தொகுதிகளை மீட்ககட்சியினர் உழைக்க வேண்டும்'
/
'இழந்த தொகுதிகளை மீட்ககட்சியினர் உழைக்க வேண்டும்'
ADDED : ஜன 31, 2025 01:17 AM
'இழந்த தொகுதிகளை மீட்ககட்சியினர் உழைக்க வேண்டும்'
ஓசூர் :''கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இழந்த சட்டசபை தொகுதிகளை மீட்டெடுக்கும் வகையில், காங்., கட்சியினர் உழைக்க வேண்டும்,'' என, காங்., - எம்.பி., கோபிநாத் பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, 6 சட்டசபை தொகுதிகளிலும் கட்சியை வலுப்படுத்தும் வகையில், தலா, 3 நிர்வாகிகள் உட்பட, 18 புதிய நிர்வாகிகளை, காங்., கட்சி நியமித்துள்ளது. அவர்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி ஓசூரில் நேற்று நடந்தது.
இதில், முன்னாள், காங்., - எம்.எல்.ஏ., மனோகரன் தலைமை வகித்து பேசியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குறிப்பாக ஓசூரில் கவனிக்கப்படாத பல்வேறு பிரச்னைகள் உள்ளன. தற்போது, ஓசூரை சேர்ந்தவர் எம்.பி.,யாக உள்ளதால் லோக்சபாவில் பேச வாய்ப்பு கிட்டியுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும், தென்பெண்ணையாற்றில் கழிவுநீரை கர்நாடகா கலந்து விடுகிறது. இதை தடுக்க, கர்நாடக முதல்வர்
சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமாரை சந்தித்து, கோபிநாத் எம்.பி., வலியுறுத்த வேண்டும். தி.மு.க., கூட்டணியில் நாம் இருந்தாலும், நம் கட்சியை வளர்க்கும் வகையில், புதிய நிர்வாகிகளுடன் இணைந்து, கிராமம்தோறும் சென்று, கட்சி பணியாற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத் பேசியதாவது:தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிநடத்தும், 'இண்டியா' கூட்டணியில் நாம் அங்கம் வகிக்கிறோம். ஆனால், காங்., கட்சி வலிமையோடு இருக்க, நாமும் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும். மாவட்டத்தில் மொத்தமுள்ள, 6 சட்ட சபை தொகுதிகளில், மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளோம். தோல்வியடைந்த தொகுதிகளை, காங்., கேட்டு பெற்று, அதில் வெற்றி பெற உழைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.மாநில செயற்குழு உறுப்பினர் நீலகண்டன், நிர்வாகி மைஜா அக்பர், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர் இந்திராணி, முன்னாள் ஓசூர் ஒன்றிய கவுன்சிலர் சின்னகுட்டப்பா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

