/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போதையில் மீன் பிடிக்க சென்று ஏரியில் விழுந்து தொழிலாளி பலி
/
போதையில் மீன் பிடிக்க சென்று ஏரியில் விழுந்து தொழிலாளி பலி
போதையில் மீன் பிடிக்க சென்று ஏரியில் விழுந்து தொழிலாளி பலி
போதையில் மீன் பிடிக்க சென்று ஏரியில் விழுந்து தொழிலாளி பலி
ADDED : பிப் 18, 2025 12:46 AM
போதையில் மீன் பிடிக்க சென்று ஏரியில் விழுந்து தொழிலாளி பலி
ஓமலுார்:மது போதையில், மீன் பிடிக்க சென்று, ஏரியில் தவறி விழுந்து இறந்தவர் உடலை, நேற்று தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
ஓமலுார் அருகே பொட்டியபுரம் பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், 32, ஆடு வியாபாரி. மனைவி அம்பிகா, 28. இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. தங்கராஜ் கடந்த, 15ல் பொட்டியபுரம் ஏரியில் மாலை, 5:00 மணிக்கு மீன் பிடிக்க நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது, மது போதையில் இருந்த தங்கராஜ் வீட்டுக்கு வராமல் ஏரியிலேயே இருந்துள்ளார். மறுநாள் தங்கராஜூவை காணவில்லை என, அவரது குடும்பத்தார், உறவினர்கள் தேடியுள்ளனர்.மேலும் மீன் பிடித்த இடத்திலும், காடையாம்பட்டி தீயணைப்பு வீரர்கள் நேற்று முன்தினம் மாலை தேடியபோதும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று காலை, 8:00 மணிக்கு தங்கராஜ் உடல் பொட்டியபுரம் ஏரியில் மிதந்துள்ளது. மதுபோதையில் தவறி ஏரியில் விழுந்து இறந்திருக்கலாம் என, பிரேதத்தை கைப்பற்றி ஓமலுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.