தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஊஞ்சல் விளையாடிய சிறுவன்கழுத்தில் கயிறு இறுக்கி பலி

ஊஞ்சல் விளையாடிய சிறுவன்கழுத்தில் கயிறு இறுக்கி பலி

ஊஞ்சல் விளையாடிய சிறுவன்கழுத்தில் கயிறு இறுக்கி பலி


ADDED : மார் 06, 2025 01:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2025 01:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊஞ்சல் விளையாடிய சிறுவன்கழுத்தில் கயிறு இறுக்கி பலி

கம்பைநல்லுார்:தர்மபுரி மாவட்டம், மொரப்பூர் அடுத்த போளையம்பள்ளியை சேர்ந்தவர் சங்கர், 39, கூலித்தொழிலாளி; இவர் மனைவி காயத்ரி. தம்பதியருக்கு நேதாஜி, 14, அலெக்சாண்டர், மணிமாறன் என, 3 மகன்கள். இதில், மூத்த மகன் நேதாஜி அதே பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 9ம் வகுப்பு படித்து வந்தார். சங்கரும், அவரது மனைவியும் நேற்று காலை, வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டனர்.

நேதாஜி நேற்று பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். மாலை, 4:00 மணிக்கு நேதாஜி தன் தாத்தா நேரு வீட்டின் அருகிலுள்ள புளிய மரத்தில் கயிற்றில் ஊஞ்சல் கட்டி விளையாடினார். அப்போது, அவரது கழுத்தில் கயிறு சுற்றி இறுக்கியதில், மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கம்பைநல்லுார் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us