தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ ஹிந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு தி.மு.க.,வுக்குபிரச்னை எதுவும் இல்லை: அமைச்சர் முத்துசாமி

ஹிந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு தி.மு.க.,வுக்குபிரச்னை எதுவும் இல்லை: அமைச்சர் முத்துசாமி

ஹிந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு தி.மு.க.,வுக்குபிரச்னை எதுவும் இல்லை: அமைச்சர் முத்துசாமி


ADDED : ஏப் 01, 2025 01:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 01, 2025 01:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹிந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு தி.மு.க.,வுக்குபிரச்னை எதுவும் இல்லை: அமைச்சர் முத்துசாமி

ஆத்துார்:''தி.மு.க.,வுக்கு, ஹிந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு எந்த பிரச்னையும் இல்லை,'' என, வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறினார்.

சேலம் மாவட்டம், ஆத்துார் அடுத்த ஏத்தாப்பூரில், முத்துமலை முருகன் கோவில் உள்ளது. இங்கு, 146 அடி உயரத்தில் முருகன் சிலை உள்ளது. நேற்று மதியம், 12:05 மணியளவில் அமைச்சர் முத்துசாமி, ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ., சந்திரகுமார், சேலம் கிழக்கு மாவட்ட செயலர் சிவலிங்கம் மற்றும் ஈரோடு மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கோவிலுக்கு வந்தனர்.

அவர்களுக்கு கோவில் நிர்வாகி ஸ்ரீதர், பூரண கும்ப மரியாதை வழங்கினார். விநாயகர், 146 அடி உயர முருகன் சிலையின் பாதத்தை அமைச்சர் முத்துசாமி தரிசனம் செய்தார். பின், 'லிப்ட்' வழியாக சென்று, முருகன் சிலை வயிற்று பகுதியில் அமைச்சர், 20 நிமிடங்கள் தியானம் செய்தார். மூலவர் முத்துமலை முருகனை வழிபாடு செய்த பின், அவருக்கு பரிசாக 'வேல்' வழங்கப்பட்டது. பக்தர்களுடன் சென்று அன்னதானம் சாப்பிட்டார்.

இதையடுத்து அமைச்சர் முத்துசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: ஈரோடு, திண்டல் பகுதியில் உள்ள வேலாயுதசுவாமி கோவிலில், முருகன் சிலை, ராஜகோபுரம் கட்டுமான பணிகள் மேற்கொள்ள, பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணி மேற்கொள்ளப்

படுகிறது. ஆத்துார், முத்துமலை முருகன் கோவிலில் உள்ள முருகன் சிலை, வழிபாடு உள்ளிட்ட அடிப்படை வசதி குறித்து பார்வையிட்டுள்ளோம். இந்த சிலை அமைத்த ஸ்தபதி தியாகராஜனை வைத்து, திண்டலிலும் இதேபோல் சிலை அமைக்க முடிவு செய்துள்ளோம். மருதமலையிலும் பெரிய முருகன் சிலை அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. கோவிலில் சிலை அமைப்பது, அறநிலையத்

துறையின் கடமையாகும். ஹிந்துக்களின் ஓட்டுகள், தி.மு.க.,வுக்கு அதிகளவில் உள்ளது. வரும் சட்டசபை தேர்தலில், ஹிந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு, தி.மு.க.,வுக்கு எந்த பிரச்னையும் இல்லை. கோவிலில் அரசியல் சார்ந்து பேசுவதில்லை. முருகனை மனதார வழிபாடு செய்வதற்கு இங்கு வந்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us