தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கோவில் அறங்காவலர் குழு நியமனம்தி.மு.க., - அ.தி.மு.க., வாக்குவாதம்

கோவில் அறங்காவலர் குழு நியமனம்தி.மு.க., - அ.தி.மு.க., வாக்குவாதம்

கோவில் அறங்காவலர் குழு நியமனம்தி.மு.க., - அ.தி.மு.க., வாக்குவாதம்


ADDED : ஏப் 03, 2025 01:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 03, 2025 01:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவில் அறங்காவலர் குழு நியமனம்தி.மு.க., - அ.தி.மு.க., வாக்குவாதம்

தர்மபுரி:தர்மபுரி டவுன் கடைவீதியில், பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவில் உள்ளது. இது, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் ஏராளமாக உள்ளது. இந்நிலையில், கோவிலுக்கு அறங்காவலர் குழு நியமிப்பதற்கான ஏற்பாடுகள் நேற்று நடந்தது. ஹிந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் மகாவிஷ்ணு, செயல் அலுவலர் ராஜகோபால் ஆகியோர் கோவிலுக்கு வந்தனர். அப்போது, தி.மு.க.,வை சேர்ந்த மாவட்ட பொருளாளர் தங்கமணியை, அறங்காவலர் குழு தலைவராக நியமனம் செய்வதற்காக, நகர செயலாளர் நாட்டான்மாது மற்றும் கவுன்சிலர்கள் உடன் வந்தனர். அதே சமயம், அ.தி.மு.க.,வை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் 23வது வார்டு கவுன்சிலர் நாகராஜ் ஆகியோர் கோவிலுக்கு வந்தனர்.

தி.மு.க.,வை சேர்ந்த தங்கமணியை அறங்காவலர் குழு தலைவராக நியமிக்க, நாகராஜ் எதிர்ப்பு தெரிவித்தார். கோவிலுக்கும் வார்டுக்கும் சம்பந்தம்

இல்லாத ஒரு நபர், எப்படி இந்த கோவிலில் அறங்காவலராக நியமிக்க முடியும் என, கேள்வி எழுப்பினர். இதில், தி.மு.க., நகர செயலாளர் மற்றும், அ.தி.மு.க.,வினரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. எங்கள் தரப்பில், 4 உறுப்பினர்கள் உள்ளோம். எங்களை நியமிக்க வேண்டும்.

இல்லையேல், முறையாக தேர்தல் நடத்துங்கள் என அ.தி.மு.க.,வினர் தெரிவித்தனர். இதனால், வேறு வழியின்றி, தி.மு.க.,வினர் மற்றும் ஹிந்து சமய அற நிலையத்துறை அதிகாரிகள் அங்கிருந்து சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us