/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
வீட்டுமனை பட்டாவை 'அ' பதிவேட்டில்பதிவு செய்யகோரி கலெக்டர் ஆபீசில் தர்ணா

ADDED : ஏப் 08, 2025 01:58 AM
வீட்டுமனை பட்டாவை 'அ' பதிவேட்டில்பதிவு செய்யகோரி கலெக்டர் ஆபீசில் தர்ணா
தர்மபுரி:தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த, பையர்நாயக்கன்பட்டி பஞ்., மோட்டூரை சேர்ந்த பொதுமக்கள் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தர்ணாவில் ஈடுபட்டனர். கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.
அப்போது, தங்களுக்கு தமிழக அரசு கடந்த, 1991, 2007, 2019ல் தாங்கள் வசித்து வரும் இடத்துக்கு பட்டா வழங்கியது. ஆனால், இதுவரை எங்களுக்கு பட்டா வழங்கப்பட்ட இடத்தை அ பதிவேட்டில் வருவாய் துறையினர் பதிவேற்றம் செய்யாமல் உள்ளனர். அவ்வப்போது, எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தை அ பதிவேட்டில் பதிவேற்றம் செய்வதாக விபரங்களை வாங்கி செல்கின்றனர். பின்னர், அவர்களிடம் இது குறித்து கேட்டால், மேலிடத்தை பார்க்க வேண்டும் என கூறுகின்றனர். எங்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் குடிசை மற்றும் ஓட்டு வீடுகளை கட்டியுள்ளோம். இவை எங்கள் குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு போதிய அளவில் இல்லை. எங்களது வீட்டை விரிவாக்கம் செய்ய வங்கியில் கடன் கேட்டால், வீட்டுமனை அங்கீகாரம் இல்லாமல் உள்ளதாக, வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, வருவாய்த்துறையினரும் அலட்சியமாக பதில் கூறி வருகின்றனர். எங்களுக்கு அரசு வழங்கப்பட்ட இடத்துக்கு மாவட்ட நிர்வாகம் உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதற்காக தர்ணாவில் ஈடுபட்டு உள்ளோம் என கூறினர்.
இதையடுத்து போலீசார், தர்ணாவில் ஈடுபட்டவர்களை தர்மபுரி கலெக்டர் சதீஸிடம் அழைத்து சென்றனர். கலெக்டர் சதீஸ், அவர்களின் மனுக்களை பெற்றுக் கொண்டு முறையாக விசாரித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.