தஞ்சாவூரிலிருந்து தர்மபுரிக்கு ரயிலில் வந்த 2,000 டன் நெல்
தஞ்சாவூரிலிருந்து தர்மபுரிக்கு ரயிலில் வந்த 2,000 டன் நெல்
ADDED : பிப் 01, 2025 12:42 AM
அ நிறம் | அளவு
தஞ்சாவூரிலிருந்து தர்மபுரிக்கு ரயிலில் வந்த 2,000 டன் நெல்
தர்மபுரி :தர்மபுரி மாவட்டத்தில், 484 முழுநேர ரேஷன் கடைகளும், 565 பகுதிநேர ரேஷன் கடைகள் என மொத்தம், 1,049 கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், கார்டு வைத்துள்ள அனைவருக்கும், தமிழக அரசின் சார்பில் இலவசமாக அரிசியும், மானிய விலையில் கோதுமை, எண்ணெய், பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்களும் வழங்கப்படுகிறது.
இதையடுத்து, தற்போது தஞ்சாவூரிலிருந்து தர்மபுரிக்கு நேற்று சரக்கு ரயில் மூலம், 42 வேகன்களில், 2,000 டன் நெல் மூட்டைகள் வந்தன. இதை, ரயில்வே கூட்ஸ்செட் சுமை துாக்கும் தொழிலாளர்கள், ரயிலில் இருந்து இறக்கினர். பின், அதிகாரிகளின் உத்தரவின்படி, லாரிகளில் ஏற்றி தர்மபுரியில் உள்ள பல்வேறு தனியார் நெல் அரவை ஆலைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
