/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கருங்குறும்பை ஆடு வளர்ப்பு: விவசாயிக்கு தேசிய விருது
/
கருங்குறும்பை ஆடு வளர்ப்பு: விவசாயிக்கு தேசிய விருது
கருங்குறும்பை ஆடு வளர்ப்பு: விவசாயிக்கு தேசிய விருது
கருங்குறும்பை ஆடு வளர்ப்பு: விவசாயிக்கு தேசிய விருது
ADDED : ஜன 18, 2025 01:21 AM
கருங்குறும்பை ஆடு வளர்ப்பு: விவசாயிக்கு தேசிய விருது
தர்மபுரி, :தர்மபுரி மாவட்டத்தில், திருச்சி கருங்குறும்பை இன செம்மறி ஆடுகளை தலைமுறை கடந்து வளர்க்கும் விவசாயிக்கு தேசிய அளவிலான விருது வழங்கப்பட்டது.
தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில், பரவலாக வளர்க்கப்படும் திருச்சி கருங்குறும்பை இன செம்மறி ஆடுகள், அவற்றின் இறைச்சி மற்றும் கம்பளி உற்பத்திக்கான உரோமத்திற்கு புகழ்பெற்றது. தற்போதைய மாறிவரும் தட்பவெப்ப நிலை மற்றும் பருவநிலை மாற்றத்தால், இவ்வினத்தை வளர்க்கும் விவசாயிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேலும், இந்த ஆட்டு இனத்தை அந்தந்த சூழலில் வளரும் மற்ற செம்மறி ஆடுகளுடன் கலப்பின பெருக்கம் செய்வதால் அவற்றின் பண்புகள் மாறுவதோடு மட்டுமல்லாமல், அவற்றின் உற்பத்தி, இனப்பெருக்கம் மற்றும் நோய் எதிர்ப்பு திறன் குறைந்துவிடுகிறது.
இதனால், எதிர்காலத்தில் இந்த இனத்தின் எண்ணிக்கையை மேம்படுத்துவதில் சிக்கல் ஏற்படும். எனவே, இனத்துாய்மை கொண்ட திருச்சி கருங்குறும்பை இன செம்மறியாட்டினத்தை அழிவிலிருந்து பாதுகாக்க, தமிழக அரசு தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் பங்களிப்போடு, தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரத்தில் செயல்பட்டு வரும் ஆலம்பாடி மாட்டின ஆராய்ச்சி மையத்தில், 205 திருச்சி கருங்குறும்பை இன செம்மறி ஆடுகளை அறிவியல் பூர்வ முறையில் வளர்த்து வருகிறது.
இம்மையத்தின் மூலம் பயன்பெற்ற பென்னாகரம் அடுத்த சத்தியநாதபுரம் பஞ்., மோட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மார்குண்டன் என்ற விவசாயி, தலைமுறைகளைக் கடந்து இன்றும், 120 துாய திருச்சி கருங்குறும்பை இன செம்மறி ஆடுகளை வளர்த்து பாதுகாத்து வருகிறார். இவருக்கு, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பரிந்துரையில், ஹரியானா மாநிலத்தில் செயல்பட்டு வரும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் தேசிய கால்நடை மரபணு வளங்கள் நிறுவனத்தால், ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் தேசிய அளவிலான பாரம்பரிய கால்நடை இன பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது.