/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
தொப்பூர் உயர்மட்ட சாலை பணிவிரைவில் துவங்க ஆலோசனை
/
தொப்பூர் உயர்மட்ட சாலை பணிவிரைவில் துவங்க ஆலோசனை
ADDED : ஜன 23, 2025 01:40 AM
தொப்பூர் உயர்மட்ட சாலை பணிவிரைவில் துவங்க ஆலோசனை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், தொப்பூர் சாலை உயர் மட்ட மேம்பாலப்பணிகள் விரைவில் துவக்கம் மற்றும் திட்ட செயலாக்கம் குறித்து, தொடர்புடைய அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழு கூட்டம், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில், தொப்பூர் சாலை அமைப்பது தொடர்பான, நில எடுப்பு நடவடிக்கைகள் முடிவுற்றதை தொடர்ந்து, மின் கம்பங்கள், குடிநீர் குழாய்கள் உள்ளிட்டவை மாற்றியமைப்பது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பணிகளை மேற்கொள்ள, தொடர்புடைய அலுவலர்களுக்கு, கலெக்டர் சாந்தி ஆலோசனை வழங்கினார். மேலும், உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள், சேலம் மாவட்டம், காடையாம்பட்டியில் முடிவடைவதையொட்டி, அங்குள்ள அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இதில், மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், டி.ஆர்.ஓ., கவிதா, சேலம் திட்ட இயக்குனர் (தேசிய நெடுஞ்சாலைகள்) சீனிவாசலு, உதவி இயக்குனர் (புவியியல் மற்றும் சுரங்கத்துறை) பன்னீர்செல்வம், திலீப் பில்ட் கான் நிறுவனத்தின் பொது மேலாளர் சின்ஹா, உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
'ஆக்கிரமிப்பு அகற்றத்தில் பாரபட்சம்அதிகாரிகள் மீது வழக்கு தொடரப்படும்'
தர்மபுரி,:தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டியிலுள்ள நெடுஞ்சாலையின் இருபுறமும் கடைக்காரர்கள் ஆக்கிரமிப்பால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக, மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் சாந்தி உத்தரவின்படி, நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மங்கையர்க்கரசி, உதவி பொறியாளர் ரஞ்சித்குமார் தலைமையில், நேற்று முன்தினம் பழைய பாப்பாரப்பட்டியிலிருந்து அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வரை, 3 கி.மீ., சாலையின் இருபுறமும் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் மூலம் அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இதில், வணிக நிறுவனங்களுக்கு பாரபட்சம் காட்டுவதாக புகார் எழுந்தது.
இது குறித்து, திருதொண்டர் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''பாப்பாரப்பட்டி நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அளித்திருந்தேன். அதன்படி, நேற்று முன்தினம் பணியை தொடங்கினர். இதில், ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றாமல், பெரும்பாலான இடங்களில் வணிக நிறுவனங்களுக்கு அதிகாரிகள் பாரபட்சம் காட்டுவதாக தெரிகிறது. சாலை ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்றாவிடில், சம்மந்தபட்ட அதிகாரிகள் மீது, குற்றவியல் மற்றும் துறை நடவடிக்கை கோரி, உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்,'' என்றார்.