/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சந்தப்பட்டி அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
/
சந்தப்பட்டி அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
சந்தப்பட்டி அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
சந்தப்பட்டி அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ADDED : ஜன 25, 2025 01:50 AM
சந்தப்பட்டி அரசு பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
அரூர், : தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த சந்தப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில், நெடுஞ்சாலை துறை சார்பில், தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் வாசு தலைமை வகித்தார். உதவி பொறியாளர் நரசிம்மன் வரவேற்றார்.
பாப்பிரெட்டிப்பட்டி உதவி கோட்ட பொறியாளர் சண்முகம் முன்னிலை வகித்தார். நெடுஞ்சாலை துறை, தர்மபுரி கோட்டப் பொறியாளர் நாகராஜ் பேசினார். உதவிப் பொறியாளர் நந்தினி காணொளி மூலம், சாலை பாதுகாப்பு, சாலை விதிகள், குறியீடுகள் தொடர்பாக மாணவர்
களுக்கு விரிவாக விளக்கம் அளித்தார். விபத்துகளினால் நாட்டில் ஆண்டுதோறும் ஏற்படும் உயிரிழப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்
புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து, சாலை பாதுகாப்பு தொடர்பான வினாடி, வினா நடத்தப்பட்டு மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.