/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கழிவுநீர் கால்வாயை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
/
கழிவுநீர் கால்வாயை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
ADDED : ஜன 25, 2025 01:50 AM
கழிவுநீர் கால்வாயை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
பாலக்கோடு, : தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சி, 1-வது வார்டு புதுார் மாரியம்மன் கோவில் தெருவில், ஆறு மாதங்களுக்கு முன் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டது. பாலக்கோடு பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கால்வாய் அடைப்பை சரி செய்ய பள்ளம் தோண்டினர். அடைப்பை சரி செய்து விட்டு, தோண்டப்பட்ட பள்ளத்தை மூடாமல் சென்று விட்டனர். இதனால், கால்வாயில் மீண்டும் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் செல்ல முடியாத நிலை உள்ளது.
மேலும், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், இந்த கால்வாய் அடைப்பால் சாலையில் தேங்கும் நிலை உள்ளது. இதனால், இவ்வழியாக பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் இந்த தெருவை கடந்து செல்லும் வாகன ஓட்டிகள், பள்ளம் இருக்கும் இடத்தில் எந்த ஒரு எச்சரிக்கை பலகையும் இல்லாததால், அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். பள்ளத்தை மூட நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

