/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
சிலை திருட்டு வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது
/
சிலை திருட்டு வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது
ADDED : பிப் 01, 2025 12:42 AM
சிலை திருட்டு வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது
காரிமங்கலம்,:தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம், பாலக்கோடு சுற்று வட்டார பகுதிகளில் கடந்த, 19 ஆண்டுகளுக்கு முன், அம்மன் கோவில்களில் இருந்து ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலைகள் திருடுபோயின. இது தொடர்பாக, காரிமங்கலம் போலீசார், 8 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
இதில், 4 பேர் உயிரிழந்த நிலையில், 4 பேர் நீதிமன்ற உத்தரவின்படி பிணையில் தினமும் கையெழுத்திட வேண்டும். இதில், ஒருவரான மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த முத்துலிங்கம், 50, வெளிநாட்டிற்கு தப்பி சென்றார். இதையடுத்து, முத்துலிங்கத்தின் மீது, நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்து உத்தரவிட்டது. வெளிநாட்டிற்கு தப்பி சென்றவர் கடந்த, 19 ஆண்டுகளாக பிடிபடாமல் இருந்தார்.
முத்துலிங்கம் வெளிநாட்டில் இருந்து, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வந்ததாக கிடைத்த தகவலின் படி, காரிமங்கலம் எஸ்.ஐ., அனந்தகுமார் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் மயிலாடுதுறை மாவட்டம், மணல்மேடு பகுதியில் முத்துலிங்கத்தை கைது செய்து, தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மாவட்ட சிறையில் அடைத்தனர்.