/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி
/
அரசு பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி
ADDED : பிப் 02, 2025 01:29 AM
அரசு பள்ளி மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி
தர்மபுரி: தர்மபுரி அருகே, அரசு பள்ளியை சேர்ந்த மாணவர்கள், மாநில அளவில் நடக்க உள்ள பல்வேறு விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். தர்மபுரி அடுத்த, அதகப்பாடி அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதன்படி, ஓசூரில் நடக்கும் மாநில அளவிலான கேரம் போட்டிக்கு, மாணவியர் ஆர்பிதா, ரூபிணி, கீர்த்தி, லலிதா ஆகிய, 4 மாணவியர் கலந்து கொள்கின்றனர். மயிலாடுதுறையில் நடக்கும் குத்துச் சண்டை போட்டிக்கு, மம்தா, ரித்திகா மற்றும் கோகுல் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவியரை, தர்மபுரி மாவட்ட சி.இ.ஓ., ஜோதிசந்திரா, தர்மபுரி டி.இ.ஓ., மகாத்மா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் முத்துக்குமார் மற்றும் தலைமை ஆசிரியை கவிதா உள்பட பலர் பாராட்டினர்..