/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூரில் டி.ஏ.பி., தட்டுப்பாடால் நெல் சாகுபடி பாதிப்பு
/
அரூரில் டி.ஏ.பி., தட்டுப்பாடால் நெல் சாகுபடி பாதிப்பு
அரூரில் டி.ஏ.பி., தட்டுப்பாடால் நெல் சாகுபடி பாதிப்பு
அரூரில் டி.ஏ.பி., தட்டுப்பாடால் நெல் சாகுபடி பாதிப்பு
ADDED : பிப் 13, 2025 01:30 AM
அரூரில் டி.ஏ.பி., தட்டுப்பாடால் நெல் சாகுபடி பாதிப்பு
அரூர்:அரூர் சுற்றுவட்டார பகுதிகளில், டி.ஏ.பி., தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
நடப்பாண்டு, தர்மபுரி மாவட்டத்தில், கனமழை பெய்ததால், தடுப்பணைகள், ஏரி, குளம், விவசாய கிணறுகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின. இதனால், அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் விவசாயிகள் நெல் நடவு செய்யும் பணியில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது, 2ம் போக சாகுபடி பணிகள் துவங்கப்பட்டு நடந்து வருகிறது. இந்நிலையில், அரூர் பகுதிகளில் டி.ஏ.பி., உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது: நெல் நடவின் போது அடி உரமும், அதன்பின், நடவு செய்த, 20 நாள் இடைவெளியில் மேலுரமுமாக டி.ஏ.பி., இடுவது வழக்கம். இந்நிலையில் அரூர், மொரப்பூர் மற்றும் கம்பைநல்லுார் பகுதியில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியார் உர விற்பனை கடைகளிலும் கடந்த, 15 நாட்களாக நெற்பயிர்களுக்கு தேவையான டி.ஏ.பி., உரம் கிடைக்காமல், தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஒரு சில தனியார் கடைகளில் டி.ஏ.பி., உரங்களை வைத்துக்கொண்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதன் காரணமாக பயிர் வளர்ச்சி பாதிக்கப்பட்டு விளைச்சல் குறைந்து, விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலை உருவாகி உள்ளது. மேலும், டி.ஏ.பி., தட்டுப்பாட்டால் நெல் சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே டி.ஏ.பி., தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

