/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும்லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில்
/
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும்லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில்
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும்லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில்
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும்லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில்
ADDED : பிப் 14, 2025 01:36 AM
அடிப்படை வசதிகளுக்கு ஏங்கும்லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில்
பாப்பிரெட்டிப்பட்டி:--பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம் கதிரிபுரத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் லட்சுமி நரசிம்ம பெருமாள் சுவாமி கோவில், பொம்மிடி- -சுகர்மில் சாலையில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமாக, 12 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. சேலம், தர்மபுரி, பெங்களூரு, கிருஷ்ணகிரி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து தினமும், 100க்கும் மேற்பட்ட மக்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர்.
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான கழிவறை, குடிநீர், தங்குமிட வசதிகள் இல்லை. இதனால் பக்தர்கள் அனைவரும் கடும் அவதிப்படுகின்றனர். குடிநீரை விலைக்கு வாங்கி குடிக்கும் நிலை உள்ளது. வெளியூர் பக்தர்கள் ஊர் திரும்ப பஸ்சுக்காக சாலையில் நீண்ட நேரம் காத்திருக்கின்றனர். அவர்கள் வசதிக்காக நிழற்கூடம் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக உள்ளது.
இதுகுறித்து பாப்பிரெட்டிப்பட்டி தங்கராஜ் கூறுகையில், ''1,000 ஆண்டு பழமையான இக்கோவில். தமிழகத்தின் புராதன கோவிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. சேலம், மேட்டூர், மேச்சேரி, ஓமலுார், தாரமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, மேல்மருவத்துார் ஓம்சக்தி கோவில், திருவண்ணாமலை, அம்மாபேட்டை சென்னம்மாள் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், இங்கு தங்கி செல்கின்றனர். அவர்களுக்கு, கோவிலுக்குள் குடிநீர் வசதி, தங்கும் வசதி, கழிவறை வசதிகள் இல்லை. எனவே, கோவிலுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும்,'' என்றார்.

