/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
குழந்தைகள் அறிவியல் மாநாடு: இருசனம்பட்டி பள்ளி சாதனை
/
குழந்தைகள் அறிவியல் மாநாடு: இருசனம்பட்டி பள்ளி சாதனை
குழந்தைகள் அறிவியல் மாநாடு: இருசனம்பட்டி பள்ளி சாதனை
குழந்தைகள் அறிவியல் மாநாடு: இருசனம்பட்டி பள்ளி சாதனை
ADDED : பிப் 18, 2025 12:47 AM
குழந்தைகள் அறிவியல் மாநாடு: இருசனம்பட்டி பள்ளி சாதனை
வீரபாண்டி:மாநில அளவிலான, குழந்தைகள் அறிவியல் மாநாட்டில், இருசனம்பட்டி அரசுப்பள்ளி மாணவர்களின் ஆய்வு கட்டுரை சிறப்பு பிரிவில் தேர்வு செய்யப்பட்டது.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், 2024ம் ஆண்டுக்கான மாநில அளவிலான குழந்தைகள் அறிவியல் மாநாடு புதுக்கோட்டை, புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லுாரியில் கடந்த, 15, 16 என இரு நாட்கள் நடந்தது. மாநாட்டில், நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற கருப்பொருளில், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி மாணவர்களுக்கான ஆய்வு கட்டுரைகள் வட்ட, மாவட்ட அளவில் பெறப்பட்டு தகுதியான, 12 ஆயிரம் கட்டுரைகளில், 33 சிறந்தவையாக தேர்வு செய்யப்பட்டன.இதில், சேலம் ஆட்டையாம்பட்டி அருகே உள்ள சென்னகிரி இருசனம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில், ஏழாம் வகுப்பு படிக்கும் மெய் ஸ்ரீதர், மிதுன்குமார் ஆகியோரின் திருமணிமுத்தாறு மீட்பு மற்றும் சுற்றுப்புற நீர்நிலைகள் பாதுகாப்பு என்ற தலைப்பில் சமர்ப்பித்த கட்டுரை சிறந்த கட்டுரையாக தேர்வு செய்யப்பட்டு, பரிசு கோப்பை மற்றும் பதக்கம் வழங்கி பாராட்டினர். இந்த மாணவர்களுக்கு பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், தலைமையாசிரியை லதா, திருமணிமுத்தாறு பாதுகாப்பு இயக்கத்தினர் மற்றும் ஆசிரியர்கள் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.