/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
ஊருக்குள் வராத தனியார் பஸ்பொதுமக்கள் சிறைபிடிப்பு
/
ஊருக்குள் வராத தனியார் பஸ்பொதுமக்கள் சிறைபிடிப்பு
ADDED : பிப் 19, 2025 01:14 AM
ஊருக்குள் வராத தனியார் பஸ்பொதுமக்கள் சிறைபிடிப்பு
பாலக்கோடு:தர்மபுரியிலிருந்து பாலக்கோடு வழியாக, ஓசூர் செல்லும் தனியார் பஸ்கள் புலிக்கரை, சோமனஹள்ளி, பாலக்கோடு, வெள்ளிச்சந்தை, சூடப்பட்டி, பிக்கனஹள்ளி, மல்லுப்படி உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லாமல், அதியமான்கோட்டை - ஓசூர் புதிய தேசிய நெடுஞ்சாலையில் செல்கின்றன. இதனால், வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், பள்ளி கல்லுாரி செல்லும் மாணவர்கள் பஸ்சுக்காக காத்திருந்து ஏமாற்றம் அடைவதுடன், உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இதுகுறித்து, பலமுறை பொதுமக்கள் போராட்டம் மற்றும் புகார் அளித்தும், தனியார் பஸ் உரிமையாளர்கள் கண்டுகொள்ளாததால், பொதுமக்கள்
அவ்வப்போது, தனியார் பஸ்களை சிறைபிடிப்பது தொடர்ந்து வருகிறது. நேற்று மதியம், தர்மபுரியில் இருந்து ஓசூர் நோக்கி சென்ற, 2 தனியார் பஸ்கள், புலிகரை மற்றும் சோமனஹள்ளி ஊருக்குள் வராமல், புதிய தேசிய நெடுஞ்சாலையில் சென்றன. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள், பஸ்சை பின் தொடர்ந்து சென்று, கார்த்தாரப்பட்டி சுங்கச்சாவடி அருகே, 2 பஸ்களை சிறைபிடித்து, ஓட்டுனரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பாலக்கோடு போலீசார், பஸ் ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் பஸ்சை இயக்க எச்சரித்தனர். இதையடுத்து பொதுமக்கள், பஸ்களை விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர்.