/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரூர் ஜெயம் வித்யாலயா பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்
/
அரூர் ஜெயம் வித்யாலயா பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்
அரூர் ஜெயம் வித்யாலயா பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்
அரூர் ஜெயம் வித்யாலயா பள்ளி மாநில அளவில் சிறப்பிடம்
ADDED : மே 20, 2025 02:40 AM
அரூர், -அரூர் அருகே எச்.தொட்டம்பட்டியிலுள்ள ஜெயம் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவியர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில, மாவட்ட அளவில் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதிய, 277 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, 100 சதவீதம் தேர்ச்சி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். மாணவி ஓம்ரித்தா, 498 மதிப்பெண் பெற்று மாநிலத்தில், 2ம் இடமும், மாவட்டத்தில் முதலிடமும் பிடித்தார்.
இவரது பாடவாரியான மதிப்பெண் தமிழ்-99, ஆங்கிலம்-99, கணிதம்-100, அறிவியல்-100, சமூக அறிவியல்-100 என பெற்றுள்ளார். மாணவியனர் சம்யுக்தா, இலக்கியா ஆகியோர், 497 மதிப்பெண் பெற்று பள்ளியில், 2ம் இடம் பிடித்தனர். சமூக அறிவியலில், 69 பேர், அறிவியல், 60 பேர், கணிதத்தில், 11 பேர், 100க்கு, 100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.அதேபோல் பிளஸ் 1 பொதுத்தேர்வில் மாணவி சதுர்த்தினா, 600க்கு, 590 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், ஸ்ருத்திகா தேவி, 588 மதிப்பெண் பெற்று, 2ம் இடமும், ரஞ்சனி, தீபிகா, 579 மதிப்பெண் பெற்று, 3ம் இடமும் பிடித்துள்ளனர்.
சாதனை படைத்த மாணவர்களை பள்ளி தலைவர் ரத்தினம், தாளாளர் செங்கோட்டையன், துணைத்தலைவர் முருகேசன், மேலாளர் கிருஷ்ணன், பள்ளியின் இயக்குனர்கள் குலசேகரன், தமிழ் வாணன், நிர்வாக இயக்குனர்கள், முதல்வர் சிலம்பரசன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்து பரிசு வழங்கினர்.