/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
திருமண வரவேற்புக்கு அரிவாளுடன்பேனர் வைத்த 6 பேர் மீது வழக்கு
/
திருமண வரவேற்புக்கு அரிவாளுடன்பேனர் வைத்த 6 பேர் மீது வழக்கு
திருமண வரவேற்புக்கு அரிவாளுடன்பேனர் வைத்த 6 பேர் மீது வழக்கு
திருமண வரவேற்புக்கு அரிவாளுடன்பேனர் வைத்த 6 பேர் மீது வழக்கு
ADDED : பிப் 20, 2025 01:37 AM
திருமண வரவேற்புக்கு அரிவாளுடன்பேனர் வைத்த 6 பேர் மீது வழக்கு
பென்னாகரம்:தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் தாலுகா, தாசம்பட்டி பிரிவு சாலையிலுள்ள பெரியாண்டிச்சியம்மன் கோவில் அருகே, கடந்த, 16 அன்று நாயக்கனுாரை சேர்ந்த சக்திவேல் மற்றும் இருமத்துாரை சேர்ந்த லதா ஆகியோரின் திருமண வரவேற்பு விழா நடந்தது. இதற்காக, அவரது நண்பர்கள் சார்பில், சாலையோரம் பேனர் வைத்திருந்தனர். அதில், இருவரது கையில் அரிவாளுடன், 'வரவேற்கிறது நாங்க, ஒரு எட்டு வந்துட்டு போங்க' என்ற வாசகங்கள்
இருந்தன. மேலும், அனுமதியின்றியும், போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாகவும் பேனர் வைத்ததாக, நாயக்கனுாரை சேர்ந்த, முருகன், 23, பிரகாஷ், 28, அலெக்ஸ், 24, பிரகாஷ், 23, ஜீவா, 33, உட்பட , 6 பேர் மீது, பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிந்து
விசாரித்து வருகின்றனர்.