/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
மகளிர் கல்லூரி துவக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்
/
மகளிர் கல்லூரி துவக்க மாதர் சங்கம் வலியுறுத்தல்
ADDED : ஜூலை 11, 2011 11:57 PM
அரூர்: மாதர் சங்க மாநாட்டின் துவக்கி நிகழ்ச்சியாக, மகளிர்
விழிப்புணர்வு ஊர்வலம் அரூர் நான்கு ரோட்டில் துவங்கி பாட்ஷாபேட்டை
கடைவீதி, பஸ் ஸ்டாண்ட் வழியாக அரூர் கச்சேரிமேட்டில் நிறைவடைந்தது.
தொடர்ந்து, கச்சேரிமேட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில், அனைந்திந்திய ஜனநாயக
மாதர் சங்க மாநில பொதுசெயலாளர் வாசுகி பேசினார். நேற்று பிரதிநிதிகள்
மாநாடு, அரூர் காமாட்சியம்மன் மண்டபத்தில் பாப்பா உமாநாத் நினைவரங்கத்தில்
நடந்தது. இந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில மாநில தலைவர் அமிர்தம்
கொடியேற்றினார். வரவேற்பு குழு தலைவர் மல்லிகா வரவேற்றார். மாநில பொருளாளர்
ஜான்சிராணி வாழ்த்தி பேசினார். தர்மபுரியில் அரசு பெண்கள் கலைக்கல்லூரி
அமைக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் விவசாயம் சார்ந்த தொழில்
வளர்ச்சியை ஏற்படுத்தி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். பாதாள சாக்கடை
திட்டத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றினர். மாவட்ட செயலாளர் கிரைஸாமேரி, மாவட்ட பொருளாளர் அன்பு,
கவிதா, வாசுகி ஆகியோர் கலந்து கொண்டனர். துணை செயலாளர் ஜோதிலட்சமி நன்றி
கூறினார்.