/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலக்கிய போட்டி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலக்கிய போட்டி
ADDED : பிப் 19, 2025 01:14 AM
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலக்கிய போட்டி
தர்மபுரி:பள்ளி கல்வித்துறை சார்பில், அரசு பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், 9ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளிடையே இலக்கிய மன்றம் சார்பில், இலக்கிய போட்டிகள் முதற்கட்டமாக, பள்ளி அளவிலும், அதை தொடர்ந்து, ஒன்றிய அளவிலும் நடந்து முடிந்துள்ளது. இதில், முதலிடத்தில் வெற்றி பெற்ற, 80 மாணவ, மாணவியருக்கு மாவட்ட அளவிலான இலக்கிய போட்டிகள், தர்மபுரி அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. இதில், கட்டுரை போட்டி, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கதை கூறுதல், பேச்சு போட்டி, கவிதை எழுதுதல் ஆகியவை நடந்தது. போட்டியில் பங்கேற்ற மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா, நேரில் ஆலோசனைகள் வழங்கி பேசினார்.
இதில், வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவிலான, போட்டிகளில் பங்கு பெறுவார்கள். மாநில போட்டியில் வெற்றி பெறுபவர்கள் வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலா, பள்ளி கல்வித்துறை சார்பில் அழைத்து செல்லப்படுவர். கடந்தாண்டு, 4 மாணவர்கள் சிங்கப்பூருக்கு கல்விச்சுற்றுலா சென்று வந்தனர்.
இதில், தலைமையாசிரியை சுதா, பள்ளி ஆய்வாளர்கள் பொன்னுசாமி, பிரபாவதி, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில், உதவி தலைமையாசிரியர் முருகன் உட்பட பலர்
உடனிருந்தனர்.