/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
அதியமான்கோட்டையில் அரசு தொடக்கப்பள்ளிநுாற்றாண்டு விழா
/
அதியமான்கோட்டையில் அரசு தொடக்கப்பள்ளிநுாற்றாண்டு விழா
அதியமான்கோட்டையில் அரசு தொடக்கப்பள்ளிநுாற்றாண்டு விழா
அதியமான்கோட்டையில் அரசு தொடக்கப்பள்ளிநுாற்றாண்டு விழா
ADDED : பிப் 26, 2025 01:16 AM
அதியமான்கோட்டையில் அரசு தொடக்கப்பள்ளிநுாற்றாண்டு விழா
அதியமான்கோட்டை:தர்மபுரி மாவட்டம், அதியமான்கோட்டை தொடக்கப்பள்ளி, (1893 - -2025) நுாறு ஆண்டுகளை கடந்துள்ளதை சிறப்பிக்கும் வகையில், நுாற்றாண்டு விழாவை, கலெக்டர் சதீஸ் நேற்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
இதில், நுாற்றாண்டு விழா உறுதிமொழியாக, 'கல்வி எங்களின் அடிப்படை உரிமை. எங்களின் அடிப்படை உரிமையை எங்களுக்கு உறுதி செய்தது எங்களின் அரசு பள்ளியே. அரசு பள்ளியே நம் அடையாளம். அதுவே நம் வழிகாட்டி. நம் ஆசிரியர்களே, நம் கலங்கரை விளக்கம். அனைவருக்கும் சமத்துவமான கல்வியை சமூக நீதியுடன் உறுதிசெய்த அரசுப்பள்ளியின் வளர்ச்சி என்பது, நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பு. பள்ளியின் வளர்ச்சிக்கு துணை நிற்பதை, உதவியாக கருதாமல், நம் கடமையாக கருதுவோம். நம் பள்ளியின் மேம்பாட்டிற்காக ஒருங்கிணைந்து செயல்படுவோம். கல்வி என்னும் பயணத்தில் தன்நம்பிக்கையை கனவுகளை சமூகநீதியை, சுதந்திரத்தை நமக்கு அளித்த, நம் அரசு பள்ளிகளுடன் உடன் நிற்போம். நம் பள்ளி நம் பெருமை, நம் பள்ளி நம் பொறுப்பு' என்ற உறுதிமொழியை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் ஏற்றனர்.
இதில், தர்மபுரி, தி.மு.க., - எம்.பி., மணி, தர்மபுரி தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஷ்வரன், டி.ஆர்.ஓ., கவிதா, சி.இ.ஓ., ஜோதிசந்திரா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

