/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
போதையில் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர்
/
போதையில் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர்
ADDED : பிப் 26, 2025 01:18 AM
போதையில் விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர்
அதியமான்கோட்டை:நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த லாரி டிரைவர் குமார், 48. இவர் மும்பையில் இருந்து கோவைக்கு லாரியில் பார்சல் ஏற்றி சென்றார். நேற்று காலை, 9:00 மணிக்கு கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில், நல்லம்பள்ளி அருகே ஏலகிரியான்கொட்டாய் பகுதியில் வந்தபோது, லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலை இடது புறமிருந்த இரும்பு தடுப்பில் மோதி நின்றது. அதியமான்கோட்டை போலீசார் மற்றும் சாலை பராமரிப்பு குழுவினர் அந்த லாரியை அப்புறபடுத்த முயன்றபோது, டிரைவர் குமார் மது போதையில் நிற்க முடியாமல் தள்ளாடினார். இதனால், லாரியை மாற்று டிரைவர் மூலம், அதியமான்கோட்டை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர்.

