தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ காந்தி ஜெயந்தியில் விடுமுறை அளிக்காத 54 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

காந்தி ஜெயந்தியில் விடுமுறை அளிக்காத 54 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

காந்தி ஜெயந்தியில் விடுமுறை அளிக்காத 54 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை


ADDED : அக் 04, 2024 01:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 04, 2024 01:10 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காந்தி ஜெயந்தியில் விடுமுறை அளிக்காத

54 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

கிருஷ்ணகிரி, அக். 4-

கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர்

(அமலாக்கம்) மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

விடுமுறை தினத்தில், கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுமுறை வழங்க வேண்டும். அவ்வாறு விடுமுறை அளிக்காத பட்சத்தில் அன்றைய தினம் பணிக்கு அமர்த்தப்படும் தொழிலாளர்களுக்கு, இரட்டிப்பு சம்பளம் அல்லது மாற்று விடுப்பு அனுமதித்து சம்பந்தப்பட்ட தொழிலாளர்களுக்கு அறிவித்து, அதன் நகலை தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு அனுப்பி, விடுமுறை தினத்தன்று நிறுவனத்தில் பார்வையில் படும்படி வைக்க வேண்டும். அக்.,௨ காந்தி ஜெயந்தியன்று, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மாதேஸ்வரன் தலைமையில், 34 கடைகள், 26 உணவு நிறுவனங்கள் மற்றும், 9 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம், 69 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டு, சட்ட விதிமுறைகளை பின்பற்றாத, 28 கடைகள், 22 உணவு நிறுவனங்கள் மற்றும், 4 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் என மொத்தம், 54 நிறுவனங்களின் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்பட்டுள்ளது.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us