/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
பாலக்கோடு பேரூராட்சிக்கு புதிய கட்டடம் கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம்

ADDED : ஆக 31, 2024 12:53 AM
பாலக்கோடு: பாலக்கோடு பேருராட்சி கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டத்தில், புதிய அலுவலக கட்டடம் கட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு பேருராட்சி அலுவலகத்தில் கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம், பேரூராட்சி தலைவர் முரளி தலைமையில் நடந்தது. பாலக்கோடு பேரூராட்சி பகுதியில் பொதுமக்களுக்கு
இடையூறாக உள்ள தெரு நாய்களை பிடித்தல், பருவ மழை காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பிற்க்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், அரசின் மூலதனமானிய நிதியிலிருந்து, பேரூராட்சிக்கு புதிய கட்டடம் கட்டும் பணி துவங்குதல், பேரூராட்சிக்கு சொந்தமான அரசு நிலங்களில் உள்ள தனியார் ஆக்கிரமிப்புக்களை அகற்றுதல், அனைத்து
வார்டு பகுதிகளிலும் பழுதான நிலையில் உள்ள சிமென்ட் மற்றும் பேவர்பிளாக் சாலைகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளுதல் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.