ADDED : அக் 04, 2024 01:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாப்பிரெட்டிப்பட்டியில் மழை
பாப்பிரெட்டிப்பட்டி, அக். 4---
பாப்பிரெட்டிப்பட்டி சுற்று வட்டாரத்தில், நேற்று மாலை, 4:20 முதல், 5:00 மணி வரை, ஏ.பள்ளிப்பட்டி இருளப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, கவுண்டம்பட்டி, பாப்பம்பாடி, மஞ்சவாடி, கோம்பூர், காளிப்பேட்டை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில், விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. இதனால், வயல்களில் தண்ணீர் தேங்கியதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. நேற்று பெய்த மழையால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.