ADDED : ஜன 24, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரூரில் கடும் பனிமூட்டம்
அரூர், :அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில், இரவில் குளிரும், பகல் நேரங்களில் வெயிலும் அடிக்கிறது. நேற்று அதிகாலை, 5:00 முதல், 10:00 மணி வரை, அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் கடும் பனிமூட்டம் நிலவியது.
இதனால், சாலையில், பஸ், லாரி உள்ளிட்ட சரக்கு வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றன. நடைப்பயிற்சி மேற்கொள்பவர்கள், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் மற்றும் கூலி வேலைக்கு செல்லும் மக்கள் அவதி
அடைந்தனர்.

