ADDED : பிப் 09, 2025 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தை சனிக்கிழமை கோவில்களில் பூஜை
தர்மபுரி:தை மாத கடைசி சனிக்கிழமையையொட்டி, தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தர்மபுரி அடுத்த அன்னசாகரம் விநாயகர் சிவ சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நேற்று காலை சுவாமிக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் நடந்தன. இதேபோல், தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜீனேஸ்வர் கோவில், நெசவாளர் காலனி சவுடேஸ்வரி அம்மன் கோவில், தர்மபுரி வெளிப்பேட்டை தெரு அங்காளம்மன் கோவில், எஸ்.வி., ரோடு பூவாடைக்காரி அம்மன் கோவில் உள்பட, தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில், தை மாத சனிக்கிழமையையொட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது.