ADDED : பிப் 21, 2025 12:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாலை தரத்தை அதிகாரி ஆய்வு
பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு உட்கோட்ட நெடுஞ்சாலை துறை சார்பில், பாலக்கோடு - கேசர்குழி சாலை, ஒருங்கிணைந்த சாலை மேம்பாட்டு திட்டத்தில் சாலை விரிவாக்க பணிகள் நடந்தது. முடிவுற்ற சாலைகளின் தரம் குறித்து, சென்னை நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் சரவணன் நேற்று முன்தினம் இரவு, கனவனஹள்ளி பகுதியில் பார்வையிட்டார். அப்போது, சாலை பணிகளின் தரம், உரிய நீளம், அகலம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
இதில், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் சசிகுமார், தர்மபுரி கோட்டபொறியாளர் நாகராஜி, சேலம் தரக்கட்டுப்பாடு கோட்டபொறியாளர் கதிரேசன், உதவி பொறியாளர் மன்னர்மன்னன், பாலக்கோடு நெடுஞ்சாலை துறை உதவி பொறியாளர் ரஞ்சித் உடனிருந்தனர்.

