/
உள்ளூர் செய்திகள்
/
தர்மபுரி
/
கிழக்கு மாவட்ட தி.மு.க.,பொறுப்பாளருக்கு வரவேற்பு
/
கிழக்கு மாவட்ட தி.மு.க.,பொறுப்பாளருக்கு வரவேற்பு
ADDED : பிப் 27, 2025 01:58 AM
கிழக்கு மாவட்ட தி.மு.க.,பொறுப்பாளருக்கு வரவேற்பு
தர்மபுரி:தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த தடங்கம் சுப்பிரமணியை நீக்கி விட்டு, புதிய பொறுப்பாளராக பென்னாகரத்தை சேர்ந்த தர்மசெல்வனை, கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் கடந்த, 23ல் அறிவித்தார். நேற்று, புதிய மாவட்ட பொறுப்பாளருக்கு தர்மபுரியில், வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில், நகர செயலாளர் நாட்டான்மாது, பொருளாளர் தங்கமணி உட்பட ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். தடங்கம் சுப்பிரமணி, இன்பசேகரன் ஆதரவாளர்கள் ஒட்டு மொத்தமாக புறக்கணித்தனர். இதனால் தொண்டர்கள் கூட்டம் குறைவாக இருந்தது. பென்னாகரம் மற்றும் ஏரியூரில் இருந்து வந்த நிர்வாகிகள், தொண்டர்கள் புடைசூழ, தலைவர்களின் சிலைகளுக்கு, தர்மசெல்வன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதில், 100 பேர் கூட இல்லாத கூட்டத்திற்காக, போலீசார் கிருஷ்ணகிரி - தர்மபுரி சாலையை அடைத்து ஒருவழி சாலையாக மாற்றினர். போக்குவரத்து நெரிசலால், ஆம்புலன்ஸ்களும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

